Talks

In the Service of Girl Children

Read Time:12 Minute

Dr Shyamala Swaminathan, a journalist, writer and social worker, on how she started her career as a journalist and became a social worker for the protection of rural girl children. She spoke on the theme, “What we can do; you all can do multifold!”

When I said that I am doing research on female infanticide in the villages of Tamil Nadu, people dismissed it as useless. But that is what brought me so many successes later on. My research articles have appeared in many Tamil newspapers. They were also well received by the people. A book compiling them was also published and it won the Best Book award from the Government of Tamil Nadu. I received it from the then Chief Minister Mr. Karunanidhi.

Saying No to Female Infanticide

At the age of 35, I had many opportunities to understand the social problems surrounding me. First, through a part-time teaching job at an orphanage for Islamic boys and girls, I came to understand the mental state of children, who yearn for motherhood and warmth. Following a short stint at a children’s home for the mentally ill, I understood many more problems. I continued to work in the field of journalism for a number of years. In 1995, I received the K K Birla Foundation Fellowship for Journalism’ for my research work titled, ‘Female Infanticide in Tamil Nadu Villages – The Solutions.’ This is what made a huge difference in my mind and made life more meaningful. I went door-to-door in Madurai, Salem and Dharmapuri areas of Tamil Nadu, collecting public opinion on female infanticide and publishing them in articles and books. The article in the Tamil daily Dinamani Kathir titled, “Give us Rs 5000. We will not kill,” and many subsequent articles created a lasting impact on the people and government officials. With the help of Professors from Madurai Kamaraj University, I completed my graduation and post- graduation. Later, at 50, I obtained doctorate from Presidency College, Chennai. I received many awards and certificates. All of these made me feel guilty that I got these accolades by exposing social atrocities that rural girls face. It also gave me the determination to protect rural girls and build a better future for them.

Some of the initiatives that I took:

In 2004, I founded a trust ‘Dr Srinivasan Valambal Srividya Trust’ to financially adopt 5 girl children, educate them, get them employed and married. I joined hands with Mr Gowthaman, Trustee of Vatsalyam Trust based in Hosur, who retrieves girl children from falling into social traps and supports them. We could support 25 girl children through this initiative.

  • Provided 25 girls with 1.5 lakh worth LIC policy on their reaching 22 years of age under ‘Life Sponsor’ scheme.
  • Provided financial aid for education for 25 girl children under the scheme, ‘Sri Vidya Sponsor.’
  • Provided 22 little, sweet homes to female destitutes, built in a complex called ‘Sri Saradeswaram’ in Thenkanikottai.
  • Under DSVS Trust, we provide support to girl children and their mothers in Ramnad.

All these have been possible with the support of donors and philanthropists for various projects. If we can do these, I am sure all of you all can do much more and reach out to the needy.

The following is the text of Dr Shyamala Swaminathan’s speech in Tamil:


16-05-2022 அன்று நடைபெற்ற MMA நிகழ்ச்சியில் பத்திரிகையாளர், எழுத்தாளர் மற்றும் சமூக சேவகர் என்று பயணித்த DR. ஷ்யாமளா ஸ்வாமிநாதன் அவர்கள் எங்களால் முடிந்தது, உங்களால் பன்மடங்கு சாத்தியம்’ என்ற தலைப்பில், பத்திரிகையாளர் என்ற தொடக்கத்தில்
இருந்து கிராமப்புற பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான சமூக சேவகியாக எப்படிப் பயணித்தார் என்பதனைப் படிப்படியாக, நமது அங்கத்தினர்களுடன் பகிர்ந்து கொண்டார். அவற்றிலிருந்து சில முக்கிய பகுதிகளை இங்கே தருவதில் மகிழ்ச்சியடைகிறோம்.

“நான் ‘தமிழக கிராமங்களில் பெண்சிசுக் கொலைகள்’ என்ற தலைப்பில் தமிழில் ஆய்வுகளைச் செய்கிறேன் என்று சொன்னதுமே பலர், அது பிரயோஜனமே இல்லை என்று சொல்லி
விட்டார்கள். ஆனால் அதுதான் பின்னாட்களில் எனக்கு பல வெற்றிகளைத் தேடித் தந்தது. என் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல தமிழ் செய்தித் தாள்களில் இடம் பெற்றன. மக்களிடையே சிறந்த வரவேற்பினையும் பெற்றது. அவற்றை தொகுத்து ஒரு புத்தகமும் வெளிவந்தது. அது தமிழக அரசின் சிறந்த புத்தகப் பரிசினை வென்றது. அதுவும் அப்போதைய முதல்வர் திரு கலைஞர் கருணாநிதி அவர்களிடமிருந்து கிடைத்தது. இதுவும் தமிழுக்குக் கிடைத்த வெற்றிதானே!” என்று தமிழின் முக்கியத்தை விளக்கிவிட்டுத் தொடர்ந்தார்.

35 வயதில் ஷ்யாமாவிற்குத் தன்னை சுற்றி இருக்ககூடிய சமூகப் பிரச்சனைகளைப் புரிந்து கொள்ளுவதற்கு பல வாய்ப்புக்கள் கிடைத்தன. முதலாவதாகப் பெற்றோர்கள் யாரும் இல்லாத இஸ்லாமிய சிறுவர்- சிறுமிகளுக்கான விடுதியில் பகுதி நேர ஆசிரியர் பணியின் மூலம், தாயன் பிற்கும் அரவணைப்பிற்கும் ஏங்கித் தவிக்கும் குழந்தைகளின் மன நிலையைப் புரிந்துகொண்டார். தொடர்ந்து ஒரு மனவளம் குன்றிய குழந்தைகள் காப்பகத்தில், மிகக் குறுகிய காலம் பணியாற்றியதன் மூலம், மேலும் பல பிரச்சனைகளை நேரடியாக சந்தித்துப் புரிந்துகொண்டார். தொடர்ந்து சிலவருடங்கள் பத்திரிகைத் துறையில் பணியாற்றினார். 1995 ம் வருடம் ‘தமிழக கிராமங்களில் பெண்சிசுக்கொலைகள் -தீர்வுகள்’ பற்றிய ஆராய்சிக்காக, ‘K.K. BIRLA FOUNDATION FELLOWSHIP FOR JOURNALISM’ வாய்ப்பினைப் பெற்றார். இதுவே அவரின் மனதில் மகத்தான மாற்றத்தை ஏற்படுத்தி, வாழ்க்கையை மிகவும் அர்த்தமுள்ளதாக்கியது.

தமிழகத்தின் மதுரை, சேலம் மற்றும் தருமபுரி பகுதிகளில் வீடு வீடாகச் சென்று, பெண்சிசுக் கொலைகள் பற்றிய மக்கள் கருத்தை சேகரித்து கட்டுரைகளாகவும் புத்தகமாகவும் வெளியிட்டு பிரபலம் அடைந்தார். தினமணிக் கதிரில் வெளிவந்த ‘5௦௦௦ கொடுங்க கொல்ல மாட்டோம் என்ற கட்டுரையும் அதனைத்தொடர்ந்து பல கட்டுரைகளும் மக்களிடையேயும், அரசு அதிகாரிகளிடத்திலும் பல தாக்கங்களை ஏற்படுத்தியது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்களின் உதவியுடன், தனது 42 வயதில் பட்டமேற் படிப்பு முதல், முனைவர் பட்டம் வரை படித்து, 50 வயதில் சென்னை மாநிலக் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றார். நிறைய விருதுகளும் பட்டங்களும் கிடைக்கப் பெற்றார். இவையனைத்துமே, கிராமப்புற பெண்குழந்தைகள் சந்திக்க நேரிடும் பலவகையான சமூகக் கொடுமைகளை வெளிப்படுத்தியதால் கிடைத்தவை என்கிற குற்ற உணர்வு அவரை மிகவும் உறுத்தியது. அதுவே கிராமப்புற பெண்குழந்தைகளை பாதுகாத்து, சிறந்த எதிர்காலம் அமைத்துத் தரும் மன உறுதியையும் அவருக்குக் கொடுத்தது.

கிராமப்புற பெண்குழந்தைகள் ஐந்து பேரை தத்தெடுத்து (FINANCIAL
ADOPTION) படிக்கவைத்து, வேலைவாய்ப்பு பெற்றுத்தந்து திருமணமும் செய்துவைத்து சிறந்த வாழ்க்கை அமைத்துத் தரலாம் என்கிற சிந்தனை உதித்தது. இதற்கென தனது தாத்தா- பாட்டியின் பெயர்களை இணைத்த D.SRINIVASAN VALAMBAL SRIVIDYA TRUST என்ற அறக்கட்டளையை 2004 ம் ஆண்டு ஸ்தாபித்தார். கணவர் திரு ஸ்வாமிநாதன் உள்பட அனைத்து குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பத்திரிக்கை உலக நண்பர்கள், உற்றார் உறவினர்கள் என்று அனைவரும் இந்த நற்பணியில் ஷ்யாமாவின் கரங்களை வலுப்படுத்தினார்கள்.

இந்த நற்பணிக்காக இதே மனநிலை கொண்டு, ஹோசூரில் செயல்பட்டுக் கொண்டிருந்த திரு கௌதமன் என்ற சிறந்த மனிதருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். ஹோசூரில் வாத்சல்யம் அறக்கட்டளையின் அறங்காவலராக இருந்தார் கௌதமன். பல்வேறு சமூக அவலங்களிலிருந்து காப்பாற்றி, பத்திரமாக இவர் வளர்க்கும் பெண் குழந்தைகளின் சிறந்த எதிர்காலத்திற்கென மூன்று திட்டங்கள் ஷ்யாமாவின் அறக்கட்டளையால் வகுக்கப்பட்டன. ஐந்து பெண் குழந்தைகள் என்று ஆத்மார்த்தமாக ஆரம்பிக்கப்பட்ட ஒரு திட்டம், 25 பெண்குழந்தைகள் என்றாகியது. ஆதரவற்ற, கணவர் மற்றும் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட பெண்களுக்கும் அடைக்கலம் வழங்கும் ஒரு முன் மாதிரி கிராமம் உருவாக்கும் அளவிற்கு திரு கௌதமனுடன் இனைந்து செயல்பட்டார்.

முதலாவதாக ‘LIFE
SPONSOR‘ என்ற திட்டத்தின் மூலம், பெண்குழந்தைகள் 22 வயதை எட்டும்போது, அவர்களின் திருமண செலவிற்கு உதவும் வகையில், ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் ரூ. 1.5.லட்சம் மதிப்புள்ள LIC பாலிசிகளை D.S.V.S. அறக்கட்டளை வழங்கியது. 25 பெண்குழந்தைகளுக்கு 25 நன்கொடை யாளர்களின் நிதியுதவி மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இரண்டாவதாக ‘SRI
VIDYA
SPONSOR‘ என்ற திட்டத்தின் மூலம், ஒவ்வொரு பெண்குழந்தையின் கல்விக்கட்டணமும் செலுத்தப்படுகிறது. 25 பெண் குழந்தை களுக்கும் 25 நன்கொடையாளர்களின் நிதி உதவி மூலம் இத்திட்டம் ஆண்டுதோறும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மூன்றாவதாக ‘SHELTER
SPONSOR‘ என்ற திட்டத்தின் மூலம் இந்தப் பெண் குழந்தைகளும் அவர்களின் பொறுப்பேற்றிருக்கும் தாய் போன்ற ஆதரவற்ற பெண்களும் பாதுகாப்பாக வசிக்கும் வகையில் 22 அழகிய சிறு வீடுகள், தேன்கனிக்கோட்டையில் அமைந்துள்ள ஸ்ரீ சாரதேஸ்வரம் எனும் வளாகத்தில் 22 நன்கொடையாளர்களின் நிதியுதவியின் மூலம் கட்டப்பட்டு, ஹோசூர் வாத்சல்யம் அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டுவிட்டது.

ஐந்தில் தொடங்கி, இன்று ஆலமரம் போல் பரந்து விரிந்துள்ள D.S.V.S. அறக்கட்டளை, தமிழ்நாட்டின் தென்கோடியில் இருக்கும் ராமநாதபுரத்துப் பெண் குழந்தைகளும், அவர்களின் தாய்மார்களும் கூட பயனடையும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை படக்காட்சிகளின் மூலமாக விளக்கங்களை அளித்து, எங்களால் செய்ய முடிந்தவைகளை விட உங்களால் பன்மடங்கு செய்ய முடியும் என்ற நம்பிக்கையை MMA உறுப்பினர்களின் மனதில் விதைத்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தார்

DR. ஷ்யாமா ஸ்வாமிநாதன் அவர்கள்.